U 19 Ind Vs Ban: ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆகுமா இந்தியா? முழு திறனை வெளிப்படுத்தும் வங்கதேசம்

உலகக்கோப்பை ஜூனியர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா 47.2 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


உலகக்கோப்பை ஜூனியர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.


19 வயதுக்கு உட்படோருக்கான 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.


இதில் அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு முன்னேறியது. வங்கதேச அணி, நியூசிலாந்து அணியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.


ஐசிசி தொடரில் வங்கதேச அணி ஃபைனலுக்கு தகுதி பெறுவதில் இதுவே முதல் முறை.


இந்திய ஜூனியர் அணி இதுவரையில் 4 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2018ல் நடந்த உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணியே கோப்பையைக் கைப்பற்றியது.